தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்த 500 இராணுவத்தினர் வரவழைப்பு!

indochina jpg
indochina jpg

கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்ட நிலையில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் சமீபத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை அமுல்படுத்தும் நோக்கில் முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதிகளுக்கு இராணுவத்தை சேவையில் அமர்த்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுய தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்துவதற்காக சுமார் 500 இராணுவத்தினர் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வேறு எந்தவொரு காரணங்களுக்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு அவ்வாறு வெளியேருவோருக்கு சுமார் 5000 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது முறையாகவும் வெளியேறும் நபர்களுக்கு 20 ஆணிரம் ரூபா வரையில் அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அங்கு இதுவரையில் குறித்த தொற்றுக்குள்ளாகி 232 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் 12 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் மெல்பர்ன் நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.