உலகையே கதிகலங்கச் செய்த லெபனான் துறைமுக குண்டு வெடிப்பு

1596589616 5203840 hirunews
1596589616 5203840 hirunews

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெய்ரூட்டின் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய குண்டு வெடிப்பால் மொத்த நகரமும் புகை மண்டாலமாக காட்சி அளிக்கிறது. கட்டிடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்துள்ளன நகரம் முழுவதும் பல்வேறு கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து விழுந்தன.

தலைநகர் பெய்ரூட் முழுவதும் மிகப்பெரிய நில அதிர்வை உள்ளது. எப்படி வெடித்தது என்பதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இந்த வெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக லெபனானின் சுகாதார அமைச்சர் ஹமாத் ஹசன் தெரிவித்துள்ளார்.

ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதால் நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் ஆம்புனன்சுகள் அவசரமாக வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமைனைக்கு கொண்டு சென்றன.

துறைமுகப் பகுதியைச் சுற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க உலங்கு வானூர்தி, தீயணைப்பு வாகனங்கள் ஆகியன கடுமையான போராட்டத்தை மேற்கொண்டிருந்தன.

அந்நாட்டின் துறைமுகப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Ammonium Nitrate என்ற வெடிமருந்து பொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து, 234 கி..மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு எதிரொலியாக நாளை தேசிய துக்க நாளாக கடைபிடிக்கப்படும் லெபனான் பிரதமர் Hasan Diab அறிவித்துள்ளார்.