9ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொதுத்தேர்தல் இன்று

1518228598 707149000election2 L
1518228598 707149000election2 L

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொது தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த முறை பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்களர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

நாளைய தினம் வாக்களிப்பு நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் மறுநாள் 6 ஆம் திகதி காலை 8 மணி முதல் அந்தந்த மாவட்டங்களில் வாக்கெண்ணும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக 77 வாக்கெண்ணும் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியில் விசேட சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இந்த முறை பொது தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் நேற்றும் இன்றைய தினமும் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் பொது தேர்தலின் முதலாவது பெறுபேறாக மாத்தறை மாவட்டத்தின் பெறுபேறினை வெளியிட முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.