காவலில் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதியை வைக்க உத்தரவு!

54439323 303
54439323 303

கொலம்பியாவின் உச்சநீதிமன்றம் செவ்வாயன்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய செனட்டருமான அல்வாரோ யூரிப்பை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

மோசடி மற்றும் சாட்சி மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளமையினால் அவருக்கு இந்த உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

2002-2010 வரை ஜனாதிபதியாக பணியாற்றிய யூரிப், நாட்டின் மிக பிரபலமான அரசியல்வாதி மற்றும் ஜனாதிபதி இவான் டியூக்கின் அரசியல் வழிகாட்டியாக உள்ளார்.

68 வயதான யூரிப் இது குறித்து டுவிட்டர் பதிவொன்றில், எனது சுதந்திரத்தை இழந்திருப்பது எனக்கும், என் மனைவிக்கும், எனது குடும்பத்திற்கும், தாயகத்துக்கும் மிகவும் வருத்தமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

லஞ்சம் மற்றும் நடைமுறை மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள யூரிப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.