15 பேர் தென்கொரியாவில் பெய்து வரும் கடும் மழையினால் பலி!

unnamed 5
unnamed 5

தென்கொரியாவில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக 15 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், 1500 இற்கும் அதிகமானோர் தங்களது குடியிருப்புகளில் இருந்து, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ச்சியாக 42 நாட்கள் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக, இரண்டு பாகங்களை பேரிடர் வலயமாக அறிவிப்பதற்கு தென்கொரிய பிரதமர் சுங் ஸி கியூன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தலைநகர மணடலம் வரையான தமது எல்லைகளை மூடுவதற்கு குயின்ஸ்லாந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில், கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் ஏற்பட்டுள்ள விக்டோரிய பிராந்தியத்தின் எல்லைகளை குயின்ஸ்லாந்து ஏற்கனவே மூடியுள்ளது.

முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்டோரியாவில் 725 புதிய தொற்றுறுதிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.