உலகிலேயே மிக அதிகமான வெப்பநிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு!

summer
summer

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலகிலேயே மிக அதிகமான வெப்பநிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகயது.

அதேவேளை கடுமையான காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படுள்ளது. இதன் காரணமாக ஏராளமான காட்டுத்தீ ஏற்படலாம் என வானிலை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று கலிபோர்னியாவில் 2008 இல் குறைந்த மழைவீழ்ச்சியுடன் மின்னல் தாக்கம் மற்றும் காற்று காரணமாக காட்டுத்தீ பரவியுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 6,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

இது சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியிலிருந்து வடக்கே கலிபோர்னியாவின் கோல்ட் கன்ரி வரை 200 க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், சவுத் லேக் தஹோ நகரில் 44,000 ஏக்கர் வறண்ட நிலப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

நேற்று செவ்வாயன்று கலிபோர்னியா மாநிலம் முழுவதும்  அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காட்டு தீயினை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது.