இலவசமாக அவுஸ்திரேலியா உள்ள 25 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி!

download 43
download 43

கொரோனா தடுப்பூசியை அவுஸ்திரேலிய மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கும் வகையில் அந்நாட்டு அரசு பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஷ்டா ஜெனகாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அஷ்டா ஜெனகா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.

இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் தடுப்பூசியானது அவுஸ்திரேலியா உள்ள 25 மில்லியன் மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியானது உலகின் மிகவும் முன்னேற்றமடைந்த நம்பிக்கைக்குரிய தடுப்பு மருந்தாகும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன்,

இந்த தடுப்பூசி வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால் நாம் உடனடியாக தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதுடன், அவுஸ்திரேலியாவில் உள்ள 25 மில்லியன் பிரஜைகளுக்கும் இதனை இலவசமாக வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.