கறுப்பினத்தவர் மீது சூடு; அமெரிக்காவின் பல நகரங்களில் போராட்டம்

2 2
கருப்பின மனிதர் ஒருவர் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டையடுத்து, அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

விசொன்சின் மாகாணத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது.

29 வயதான ஜேக்கப் பிளேக், தனது மூன்று குழந்தைகளுக்கு முன்பாக விசொன்சின் மாகாணத்தில் கெனோஷா பொலிஸ் அதிகாரிகளால் சுடப்பட்டார்.

சுடப்படுவதற்கு முன்னர் அந்த நபருக்கும் பொலிசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

இணையத்தில் வெளியிடப்பட்ட இரண்டு வீடியோக்களின்படி, பொலிஸ் பிடியில் இருந்து விடுபட்டு தனது வாகனத்தில் ஏற முயன்றபோது அவரை பொலிஸார் சுடப்பட்டார். அவரை நோக்கி 7 தோட்டாக்கள் சுடப்பட்டன.

துப்பாக்கிச் சூடு நடத்தியபோது ஜேக்கப் பிளேக்கின் 8, 5 மற்றும் 03 வயதுடைய மூன்று குழந்தைகள் வாகனத்திலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தற்போது பிளேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கீழ் முள்ளந்தண்டு பகுதியில் துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளதால் அவரது இடுப்பின் கீழ் பகுதி செயலிழந்துள்ளது.

கறுப்பினத்தவருக்கு எதிராக பொலிஸ் துன்புறுத்தலுக்கு அமெரிக்காவின் பல நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.