கொவிட் 19 பரிசோதனை முடிவுகளை குறுந்தகவல் மூலம் அறியும் வசதி அறிமுகம்

C Mask Translation Voice Gadget
C Mask Translation Voice Gadget

கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறியும் வசதியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆரம்பித்து வைத்தார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதற்கு பின்னர் அங்கு கருத்து தெரிவிக்கையில்

கொரோனா பரிசோதனை செய்து கொள்வோரின் செல்லிடப்பேசிக்கு 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் பரிசோதனை முடிவுகள் அனுப்பும் திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

அத்துடன் கொரோனாவை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்றினாலே கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கட்டுக்குள்தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.