அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 60 இலட்சத்தை கடந்தது!

outbreak coronavirus world 1024x506px
outbreak coronavirus world 1024x506px

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60இலட்சத்தைக் கடந்துள்ளது .

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை ஒரு இலட்சத்து 83ஆயிரத்து 653பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 44ஆயிரத்து 637பேர் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 289பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 25இலட்சத்து இரண்டாயிரத்து 851பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 16ஆயிரத்து 378பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன், 33இலட்சத்து 13ஆயிரத்து 861பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.