இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டால் இரு நாடுகளுக்குமே நல்லது-ஜெய்சங்கர்

6232020121845
6232020121845

இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டால் இரு நாடுகளுக்குமே நல்லது. அதற்கு மாறாக செயல்பட்டால் அதன் பாதிப்புகளை இரு நாடுகளுமே சந்திக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா-சீனா இடையே 1962-ஆம் ஆண்டு நடந்த மோதலுக்குப் பிறகு தற்போது லடாக்கில் மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியாவும், சீனாவும் படைகளைக் குவித்துள்ளது இதுவரை இல்லாத நிகழ்வாகும். எல்லை தொடா்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் இராஜ்ஜிய ரீதியிலேயே தீா்வு காணப்பட்டு வருகிறது.

இதேபோல் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்குத் தீா்வுகாண அந்நாட்டு அரசுடன் இராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. உண்மையில் சீனாவும் மிகவும் இணக்கமாக ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைக்குத் தீா்வுகாணப்பட்டால் அது இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களுக்கும் மதிப்பளிப்பதாக இருக்க வேண்டும். ஒருதலைபட்சமாக இருக்கக் கூடாது. இதைத்தான் சீனாவிடம் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.