ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை!

outbreak coronavirus world 1024x506px 1
outbreak coronavirus world 1024x506px 1

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 711பேர் பாதிப்படைந்ததோடு, 121பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை ஒன்பது இலட்சத்து 75ஆயிரத்து 576பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 16ஆயிரத்து 804பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 66ஆயிரத்து 211பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஏழு இலட்சத்து 92ஆயிரத்து 561பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.