யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

20200827 092257
20200827 092257

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே /81 கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை பிரதி முதல்வர் து.ஈசன் தலைமையிலான மாநகர சபையின் சுகாதார பிரிவு உத்தியோகத்தர்களின் வழிகாட்டுதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரின் பங்குபற்றுதலில் குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெற்றது.

கடந்த காலங்களில் கொட்டடி பகுதியில் டெங்கினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதனால் எதிர்வரும் மாதம் மழைக்காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் டெங்கு தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதனலால் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.