சேதமின்றி நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்!

denmark
denmark

டென்மார்க் நாட்டின் ‘ரப்ஜெர்க் நியூடு’ என்று அழைக்கப்படும் கலங்கரை விளக்கம் மணல் அரிப்பு காரணமாக மெல்ல, மெல்ல சரிந்து மொத்தமாக கடலில் விழும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

கடலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த கலங்கரை விளக்கம், மணல் அரிப்பு காரணமாக தற்போது 2 மீட்டர் தொலைவில் இருக்கிறது. எனவே இந்த கலங்கரை விளக்கத்தை சேதப்படுத்தாமல், அப்படியே பெயர்த்து எடுத்து நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் வைக்க டென்மார்க் அரசு முடிவு செய்தது.

அதற்காக 7½ லட்சம் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் பணிகள் தொடங்கின.

தண்டவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் 720 டொன் எடைகொண்ட அந்த கலங்கரை விளக்கத்தை 70 மீற்றர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடந்தன. கடுங்குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், கலங்கரை விளக்கத்தை பெயர்த்தெடுக்கும் நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு இரசித்தனர்.