ஹொங்கொங் போராட்டத்துக்கு வித்திட்டவர் விடுதலை

Hong Kong
Hong Kong

ஹொங்கொங் போராட்டத்துக்கு வித்திட்ட சான் டோங் காய் என்பவரை நேற்று முன்தினம் விடுதலை செய்துள்ளது,

ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த மசோதா கைவிடப்பட்டிருந்தமையினை ஜனநாயக ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர்.

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை சீனா மற்றும் தாய்வானுக்கு நாடு கடத்த வழிவகை செய்வதற்கு சட்ட மசோதாவில் திருத்தங்கள் இடம்பெறுவதற்கு காரணமாக இருந்தவர் சான் டோங் காய்.

சான் டோங் காய் மீதான கொலை வழக்குக்காக அவரை தாய்வானுக்கு நாடு கடத்துவதற்காகவே கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதுதான் அங்கு மாபெரும் போராட்டத்துக்கு வித்திட்டது.

சான் டோங் காயை ஹொங்கொங் நீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்தது. சிறையில் இருந்து வெளியே வந்த சான் டோங் காய், பாதிக்கப்பட்ட தனது காதலியின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதோடு, தன் மீதான குற்றச்சாட்டை தாய்வான் பொலிஸில் சரணடையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஹொங்கொங்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அதன் நிர்வாக தலைவர் கேரி லாமை பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறுநபரை பணியமர்த்த மத்திய அரசான சீனா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பின்னணி;-

ஹொங்கொங்கை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு தைவானில் கர்ப்பிணி காதலியை கொலை செய்துவிட்டு ஹொங்கொங்கிற்கு தப்பி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் காதலியின் கிரெடிட் அட்டையில் இருந்து பணம் எடுத்ததாக பணமோசடி வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.