அந்தமான் பழங்குடியினர் 9 பேருக்கு கொரோனா தொற்று!

avd
avd

அந்தமானில் ‘கிரேட் அந்தமான் மக்கள்’ என்று அழைக்கப்படும் பழங்குடியினர் தற்போது 59 பேர் மாத்திரமே வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இவர்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அந்தமான் – நிகோபார் தீவுகளுக்கான சுகாதாரத் துறை இணைச் செயலாளரும், அப்பிராந்தியத்திற்கான கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரியுமான வைத்தியர் அவிஜித் ராய் தெரிவித்துள்ளதாவது,

ஸ்ட்ரைட் தீவில் வசிக்கும் 34 பேர், போர்ட்பிளேரில் வசிக்கும் 24 பேர் என கிரேட் அந்தமான் பழங்குடியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் போர்ட்பிளேரில் வசிக்கும் 5 பேருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஸ்ட்ரைட் தீவில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் போர்ட் பிளேரில் உள்ள ஜி.பி.பந்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.