76 நாடுகள் இணைந்து கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து ஆராய்ச்சி

202008251308463361 WHO says plasma therapy to treat coronavirus still SECVPF
202008251308463361 WHO says plasma therapy to treat coronavirus still SECVPF

உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல நாடுகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றன.

அந்த நிலையில் 76 செல்வந்த நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஒன்றிணைந்து செயற்படுகின்றது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது .

இந்த ஒருமித்த தடுப்பு மருந்து பரிசோதனைக்கு ‘கோவாக்ஸ்’ பரிசோதனை எனப் பெயரிடப்பட்டுள்ளது. கோவாக்ஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மூன்றாம் கட்ட சோதனைக்கு பிறகு வெற்றியடைந்தால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு இந்த தடுப்பு மருந்து குறைந்த விலைக்கு விற்கப்படும் என்றும் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்ட நாடுகளுக்கு இலவசமாக இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும் என ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது

ஜப்பான், ஜேர்மனி, நோர்வே உள்ளிட்ட பல நாடுகளும் இந்த தடுப்பு மருந்து பரிசோதனைக்கு நிதி வழங்கி வருகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் கருத்துக்களுக்கு எதிர் கருத்து தெரிவித்து வருகின்றார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என்றும் இதனால் அமெரிக்கா இந்த நாடுகளுடன் ஒன்றிணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.