சிறந்த பெறுபேற்றை வழங்கியுள்ள ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பூசி

vaccine 5439120 640
vaccine 5439120 640

ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பூசி உடலில் ஆன்டிபாடிக்களை உற்பத்தி செய்வதாக பிரபல லான்செட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு முதல்முறையாக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா கடந்த மாதம் அறிவித்தது. இந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக் V’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பதிவு செய்தபிறகு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தனது மகளுக்கே பயன்படுத்தினார்.

இதையடுத்து ஸ்புட்னிக் தடுப்பூசி தீவிர சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய தடுப்பூசி மனித உடலில் ஆன்டிபாடிக்களை உற்பத்தி செய்வதாகவும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் உலகின் முன்னணி மருத்துவ பத்திரிகையான தி லான்செட் தெரிவித்துள்ளது.