பொலிவியா அதிபராக இவோ மோரல்ஸ் தெரிவு

boliviya
boliviya

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று 4வது முறையாக இவோ மோரல்ஸ் அதிபராக பதவியேற்க உள்ளார்.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி 99.9 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டிருப்பதாகவும், பெனி பிராந்தியத்தில் பதிவான வாக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்ட பகுதியில் நவம்பர் மாதம் மீண்டும் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலில் தான் வெற்றி பெற்றுவிட்டதாக அதிபர் இவோ மோரல்ஸ் நேற்றே அறிவித்துவிட்டார். இத்தேர்தல் முடிவை தேர்தலில் போட்டியிட்ட மற்றுஅமாரு வேட்பாளர் மெசா ஏற்கவில்லை.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். வாக்கு எண்ணும் நடைமுறைகளை விமர்சித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.