இணையத்தை கலக்கும் ‘ஜிங்ஜாங்’ குதிரை

chinies horsr
chinies horsr

சீனாவின் ஹூனான் மாகாணம் ஜிங்ஜாங் நகரில் உள்ள ஒரு விவகாரமான குதிரை தன் மீது சவாரி செய்ய யாரேனும் ஏறினால் மயக்கம் வருவதுபோல் நடித்து தரையில் விழுந்து விடுகிறது உயிர்போனால் எப்படி தரையில் கிடக்குமோ, அப்படி கால்களை மேலே தூக்கி, நாக்கை வெளியே தள்ளி அட்டகாசமாக நடிக்கிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சவாரி செய்ய வந்தவர் திரும்பி சென்றதும் துள்ளி குதித்து எழுந்து விடுகிறது. ஊரின் பெயரையே அந்த குதிரைக்கு வைத்து அதை ‘ஜிங்ஜாங்’ என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அதன் மீது ஏற வரும்போது மயங்கி விழுந்து விடுகிறது ‘ஜிங்ஜாங்’. சில சமயம் தொட்டாலே மயக்கம்போட்டு விழுகிறது.

‘ஜிங்ஜாங்’ சுட்டித்தனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மிகக்குறைவான நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அந்த வீடியோ பெற்றிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பாக, நகம் வெட்டுவதை விரும்பாத நாய் ஒன்று, நகவெட்டியை அருகில் கொண்டு சென்றாலே மயக்கம் வருவதுபோல் தரையில் விழுந்து நடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது நினைவுகூரத்தக்கது.

இதனை https://www.youtube.com/watch?v=L3dC3Z8pf5U குறித்த இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும்.