துறவி கேசவானந்த பாரதி மறைவு!

862020174213 678x381 1
862020174213 678x381 1

அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கிய புகழ்பெற்ற தீர்ப்பு தொடர்பான வழக்கின் மனுதாரரான துறவி கேசவானந்த பாரதி நேற்று(06) காலமானார்.

கேரள மாநிலம், காசர்கோட்டில் உள்ள இடநீர் மடத்தில் வயதுமூப்பு தொடர்பான நோய்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆதிசங்கரரின் முதல் சீடர்களில் ஒருவரான தோடகாசார்யரால் கேரள மாநிலம், காசர்கோட்டில் நிறுவப்பட்டது இடநீர் சங்கர மடமாகும். சுமார் 1,200 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த மடத்தின் பீடாதிபதியாக கேசவானந்த பாரதி இருந்துவந்தார்.

அரசியல் சட்ட தொடர்பான வழக்குகளில் இவரது வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே அடிப்படையாக மேற்கோள் காட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.