அருணாச்சலப் பிரதேசத்தில் காணாமல் போன ஐவர் பற்றி தெரியாது- சீனா

china ccid
china ccid

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை சீன ராணுவம் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற ஐயங்களுக்கு இடையில் சீன ராணுவம் அவர்களைப் பற்றி தங்களுக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முறைப்படி அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு சுமை தூக்கிகளாகவும் வழிகாட்டிகளாகவும் பணியாற்றி வந்த 5 பேர் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போன நிலையில் சீன இராணுவத்தால் அவர்கள் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.