ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 10 பேர் பலி!

1399061909145752621167074
1399061909145752621167074

ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பயங்கரவாத தாக்குதலில் துணை அதிபர் அம்ருல்லா சலே சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இத்தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், துணை அதிபரின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

நாட்டின் முதல் துணை அதிபரான இவர் இன்றையதினம் தலைநகர் காபூலில் பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் சென்றுகொண்டிருந்த போதே அவரது வாகனத்தை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை இத்தாக்குதலுக்கு எவ்வித அமைப்பும் பொறுப்பேற்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.