அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம்

australian police
australian police

அவுஸ்திரேலிய நாட்டில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து, காரை வேகமாக செலுத்தி வந்து மக்கள் மீது மோதச் செய்யும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதை தடுப்பதற்காக கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

கடந்த 2017-ம் ஆண்டில் மெல்பேர்னில் மட்டும் இதுபோன்ற 3 தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டனர். 45 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் இனி மக்கள் கூட்டத்திற்குள் காரை வேகமாக செலுத்தி வந்து அசம்பாவித செயலில் ஈடுபட முயன்றால், அந்த வாகனத்தின் சாரதியை சுட்டுக்கொல்ல பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.