ஆர்ஜன்டீனாவின் அதிபராக அல்பர்ட்டோ பெர்னாண்டஸ் தெரிவு

alberto
alberto

தென்னமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மத்திய இடதுசாரி கூட்டணி 48.1 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சி 40.4 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இதனால் இடதுசாரி கூட்டணியின் அதிபர் வேட்பாளரான அல்பர்ட்டோ பெர்னாண்டஸ் அதிபராக பொறுப்பேற்கிறார்.

துணை அதிபராக ஆர்ஜன்டீனாவின் முன்னாள் அதிபரான, கிறிஸ்டினா பெர்னாண்டஸ் பொறுப்பேற்கவுள்ளார்.