கிம் ஜோங் உன்னைச் சந்திக்கத் தயார்- ஜப்பானின் புதிய பிரதமர்

e79ccd2d yoshihide suga
e79ccd2d yoshihide suga

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக, ஜப்பானின் புதிய பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘ஜப்பான் பிரதமராக எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

வடகொரியாவுடனான உறவை இயல்பாக்க ஜப்பான் தொடர்ந்து முயலும். இந்தச் சந்திப்பு இரு நாட்டு உறவுகளுக்கு மட்டுமல்லாமல் பிராந்திய அமைதிக்கும் உதவும். இதற்கான நடவடிக்கையை நான் எடுப்பேன்’ என கூறினார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகளை, ஜப்பான், ஆசியான் ஜப்பான் உச்சி மாநாட்டில் கடுமையாக விமர்சித்தது.

இந்நிலையில், பதவி ஏற்றது முதல் சர்வதேச நாடுகளுடான உறவைப் பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் சுகா, எந்தவித வடகொரிய தலைவரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.