கலிபோர்னியா மாநிலத்திற்கு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை

california
california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்குப் பிராந்தியத்திற்கு காலநிலை சேவைகள் நிறுவனத்தினால் அதியுயர் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 128 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தீ பரவுவதனை கருத்திற்கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் பரவிய காட்டுத் தீயினால் ஏற்கனவே 658 ஏக்கர் தீக்கிரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.