காட்டுத் தீயிலிருந்து உயிர் தப்பிய அர்னால்ட்

arnald
arnald

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயிலிருந்து பிரபல ஹொலிவூட் நடிகர் அர்னால்டை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் திடீரென்று காட்டுத்தீ பரவியதில் லொஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் வீடுகளை தீ சூழ்ந்துள்ளது. இதனால் அரசு அதியுயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காட்டுத்தீயால் பிரபல கூடைப்பந்து வீரர் லேப்ரான் ஜேம்ஸ் சொகுசு வீடு எரிந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபல ஹொலிவூ நடிகர் அர்னால்டு வீட்டையும் காட்டுத் தீ சூழ்ந்தது. இதனால் தப்பி செல்ல வழி தெரியாமல் தவித்தார். 2 தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாக சென்று அர்னால்டை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தனர்.

தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என்று டுவிட்டரில் அர்னால்ட் பாராட்டி உள்ளார்.

இதுபோல் காட்டுத் தீயில் சிக்கிய ஹொலிவூ நடிகர்கள் கிளார்க் கெர்க், கர்ட் சட்டர் ஆகியோரையும் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்.

அர்னால்ட், லிண்டா ஹாமில்டன் ஆகியோர் நடித்துள்ள டெர்மினேட்டர் டார்க் பேட் படம் திரைக்கு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய காட்டுத் தீ காரணமாக இந்த படத்தின் சிறப்பு காட்சி இரத்து செய்யப்பட்டது.

கலிபோர்னியாவில் தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.