ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு பொதுமக்கள் 14 பேர் பலி !

201806171438384247 Death toll from suicide bombing in Afghanistan climbs to 36 SECVPF
201806171438384247 Death toll from suicide bombing in Afghanistan climbs to 36 SECVPF

ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் சாலையோரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 7 பெண்களும் சிறுவர்களும் அடங்குவதாக ஆப்கானிஸ்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களைப் பார்க்கும்போது இதனை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் டோஹாவில் ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்களால் கடத்தப்பட்ட இராணுவ வீர்ரகளைத் தலிபான்கள் விடுவித்தனர்.

இந்த நிலையில் இந்தத் தாக்குதலைத் தலிபான்கள்நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது.

மேலும்,ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கட்டாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.