பக்தாதி கொலைக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் ஐ.எஸ் அமைப்பு

isis 1
isis 1

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதை கொண்டாட வேண்டாம் எனவும் அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி அளிப்போம் என ஐ.எஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பக்தாதி கொல்லப்பட்டதை அடுத்து அபு இப்றாஹீம் அல் ஹசீம் அல் குராசி ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், பக்தாதி கொல்லப்பட்டதை கொண்டாட வேண்டாம், தகுந்த பதிலடி அளிப்போம் என ஐ.எஸ் அமைப்பு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஐ.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள பதிவில்,

‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வயதான ஒரு பைத்தியம். பக்தாதி கொல்லப்பட்டதை கொண்டாட வேண்டாம் அமெரிக்கா. உங்களுக்கு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுப்போம். பக்தாதியின் கொலைக்கு பழி வாங்குவோம். அமைப்புக்காக அவர் செய்த பணிகள் என்றும் மறக்க முடியாதவை” என கூறியுள்ளார்.