பிரித்தானிய பெண் தூதரக அதிகாரி கொலை வழக்கு- சாரதிக்கு மரண தண்டனை

download
download

லெபனான் நாட்டில் பிரிட்டன் தூதரகத்தில் பணியாற்றிய பிரித்தானிய நாட்டை சேர்ந்தவர் 30 வயதுடைய ரெபேக்கா டைக்ஸ் எனும் பெண் அதிகாரியை கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் உபர் வாகன சாரதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டின் இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பிரித்தானியாவிற்குச் சென்ற ரெபேக்கா 15-12-2017 அன்றிரவு கேளிக்கை விடுதியில் நண்பர்களுடன் கலந்து கொண்டு அதன் பின்னர் தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக உபர் வாடகை காரை அழைத்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் வாகன சாரதி ரெபேக்காவை கற்பழித்து கழுத்தில் கயிறை இறுக்கிக் கொன்றதுடன் அவரது பிணத்தை நெடுஞ்சாலையோரத்தில் தூக்கி வீசிச் சென்றான்.

அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் ரெபேக்காவை கற்பழித்துக் கொன்ற குற்றத்துக்காக லெபனானைச் சேர்ந்த அந்த உபர் காரின் வாகன சாரதி டரேக் ஹவுஷியே என்பவனை கைது செய்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் நிறைவடைந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி டரேக் ஹவுஷியே-வுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

லெபனான் நாட்டில் கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்களுக்கு நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் கடந்த 2004ம் ஆண்டில் இருந்து எந்த குற்றவாளிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.