மருத்துவமனையிலிருந்து வெளியேறிய டிரம்ப் எங்கே சென்றார்?

625.0.560.350.160.300.053.800.668
625.0.560.350.160.300.053.800.668

கொரோனா சிகிச்சை பெற்றுவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இருப்பினும் அவர் தொடர்ந்து வெள்ளைமாளிகையிலேயே சிகிச்சை பெறுவார் எனவும் மருத்துவக்குழு தெரிவித்துள்ள போதும் தற்போது அவர் எங்கே சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் (74) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2-ம் திகதி கொரோனா பரிசோதனை செய்து கொண்ட போது.ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர். இதனிடையே வெள்ளைமாளிகையில் இருந்த டொனால்டு டிரம்பிற்கு லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது.

காய்ச்சல் தொடர்ந்து வந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஜனாதிபதி டிரம்ப் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது டிரம்ப்பின் நிலைமை சற்று மோசமாக இருந்ததாக தகவல் வெளியான நிலையில் அவர் ரெம்டெசிவிர் மருந்தை தொடர்ந்து எடுத்து வந்தார்.

இதனிடையே அவருக்கு காய்ச்சல் குணமடைந்துள்ளதாகவும், ஆனால் அடுத்த 48 மணி நேரம் அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவர்கள் குழு தெரிவித்தது.

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்தே காணொளி ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி டிரம்ப், தாம் நலமாக இருப்பதாகவும் மிக விரைவில் பணிக்கு திரும்புவதாகவும் அறிவித்திருந்தார்

தற்போது டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வாகனம் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள ஊடகங்கள், அவர் எங்கே செல்கிறார் என்பது தொடர்பில் தகவல் வெளியியாகவில்லை என தெரிவித்துள்ளன