நயாகரா ஆற்றில் 101 ஆண்டுகளுக்கு பின் வெளியில் வந்த படகு

Niagara River
Niagara River

கனடாவின் கடந்த 1918ம் ஆண்டு நயாகரா ஆற்றில் ஹார்ஸ்ஷூ அருவிக்கு அருகே பாறைகளுக்கு இடையில் சிக்கிய இழுவைப் படகு 101 ஆண்டுகளுக்கு பிறகு நீருக்கடியில் இருந்து வெளியே வந்துள்ளது.

குறித்த படகு பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த நிலையில் படகினை மீட்கும் முயற்சி பயனளிக்காமையினால் கயிற்றின் உதவியால் படகில் இருந்த இருவரை கயிற்றின் மூலமாக காப்பாற்றியிருந்தனர்.

150 அடி ஆழத்தில் மூழ்கிய படகு பிரமாண்ட நீர்வீழ்ச்சியான நயாகராவின் நீரோட்டத்துக்கு அசைந்துகொடுக்காமல் கிட்டத்தட்ட 101 ஆண்டுகள் அந்த படகு சிக்கியிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்று வீசியதன் காரணமாக பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த படகு நகர்ந்து, நீருக்கு வெளியே வந்ததுள்ளது.

பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்த படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் நீரால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.

101 ஆண்டுகளுக்கு பிறகு நீருக்கு அடியில் இருந்து வெளியே வந்த படகினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.