இலங்கைக்யில் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தென்கொரியா கடனுதவி

South Korea
South Korea

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவியை வழங்க கொரியா இணங்கியுள்ளது. இது தொடர்பிலான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் 0.15 வீத வட்டியுடன் Korea Eximbank-இனால் இந்த கடன் வழங்கப்படவுள்ளது.

மேலும் கடனை திருப்பிச்செலுத்த 40 வருடங்கள் கால அவகாசமும் சலுகை தவணை அடிப்படையில் 10 வருட அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கல்வியமைச்சினால் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.