ஒரு வருடத்திற்கும் மேலாக மனைவியை கழிவறைக்குள் வைத்த கணவர்!

ஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் பூட்டி சிறைவைக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் அரியானா மாநிலம் – பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் கிராமத்தில், வாழும் 35 வயது பெண்னே இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ளார்.

அயலவர்கள் கொடுத்த தகவலுக்கமைய குறித்த பெண், பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரியினால் மீட்கப்பட்டுள்ளதுடன் அவரின் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்தபெண், பல நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்ததனால் உடல் மெலிந்து காணப்பட்டதுடன்
மனநிலை பாதிக்கபட்டவர் என தெரிவிக்கப்பட்டபோதும் அது உண்மையல்ல என மீட்பு குழு தெரிவித்துள்ளது. அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தம்பதியினருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமான நிலையில் 16 வயது மகன் மற்றும் 15 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்கள் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

குறித்த பெண் இவ்வாறு சிறைப்படுத்தப்பட்டதில் அவரின் குழந்தைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைசெய்து வருகின்றனர்.