அமெரிக்க விலங்கியல் பூங்காவில் முதன்முறையாக பிறந்த கொரில்லாக் குட்டி!

அமெரிக்காவின் விலங்கியல் பூங்காவில் முதன்முறையாக கொரில்லாவொன்று குட்டியை ஈன்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போஸ்டனிலுள்ள ஃபிராங்ளின் உயிரியல் பூங்காவில் 39 வயதான கிகி என்ற பெண் கொரில்லா வளர்க்கப்பட்டு வந்தது. இக் கொரில்லா கடந்த வாரம் ஆண் குட்டியொன்றை ஈன்றது.

தற்போது குறித்த கொரில்லாக் குட்டியை வைத்தியர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் விலங்கியல் பூங்காவின் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.