தனது வாக்கை பதிவு செய்தார் அமெரிக்க ஜனாதிபதி!

trump votig
trump votig

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புளோரிடாவில் தனது வாக்கை பதிவு செய்தார்

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளதோடு அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பைடன் களமிறங்கியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களான ட்ரம்ப், ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்களில் அஞ்சல் மூல வாக்கெடுப்புக்கள் நடைபெற்று வருகின்றன

இந்தநிலையில் புளோரிடாவிலுள்ள நூலகத்தில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் ட்ரம்ப் தமது வாக்கை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.