துருக்கியில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம்!

EllNM5 VcAAPtoc
EllNM5 VcAAPtoc

துருக்கியின் இஸ்மீர் மாகாணத்தில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம் தாக்கியுள்ளது.

இந்நில நடுக்கம் வட கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரம் முதல் துருக்கியின் இஸ்தான்புல் நகரம் வரை உணரப்பட்டுள்ளது.

இவ் நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலைகளும் தாக்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்கின்றன.

இதுவரை சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் இஸ்மீர் நகரில் ஆறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் பூகம்பம் ஏற்பட்டபோது இஸ்மிரில் மக்கள் தெருக்களில் ஓடியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளிடையே மக்கள் தமது உறவுகளை தேடும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஜனவரி மாதம் துருக்கியின் கிழக்கு எலாசிக் மாகாணத்தில் சிவ்ரிஸில் ஏற்பட்ட பூகம்பத்தில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 1,600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.