ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!

download
download

ஜம்மு – காஷ்மீரில் இன்று காலை (02) ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் 6.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹன்லி பகுதியில் இருந்து வடமேற்கில் 51 கி.மீ தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், எனினும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.