225 கிலோமீற்றர் வேகத்தில் பிலிப்பைன்சில் ‘கோனி’ (Goni) சூறாவளி!

பிலிப்பைன்சில் ‘கோனி’ (Goni) சூறாவளியினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூறாவளி மணித்தியாலத்திற்கு 225 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் பிலிப்பைன்சில் 19 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, பாதிக்கப்பட்டவர்கள் மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.