Update : ஜோ பிடன் 223இடங்களில் முன்னிலை

download 3 11
download 3 11

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் முடிவுகளுக்கு அமைய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 223 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் மசாசூட்ஸ், நியூ ஜெர்சி, மேரிலாண்ட் மற்றும் வெர்மாண்ட் ஆகிய மாகாணங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், ஓக்லஹாமா, கெண்டகி மற்றும் இண்டியானா ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.