அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையில் உள்ள ஜோ பைடன்!

202011050551556574 US presidential election Joe Biden moves closer to victory SECVPF
202011050551556574 US presidential election Joe Biden moves closer to victory SECVPF

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய மாநிலங்களில் ஒன்றான ஜோர்ஜியா மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2,449,580 வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 2,448,484 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடன் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

1992 முதல் ஜனாதிபதித் தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தில் எந்த ஜனநாயகக் கட்சியினரும் வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 4 ஆம் திகதி முடிவடைந்ததிலிருந்து வாக்குகள் எண்ணும் தீவிரமாக நடை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.