ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவு!

201810180106066605 KadaladiBoy attackedCase for the policeJudge order SECVPF
201810180106066605 KadaladiBoy attackedCase for the policeJudge order SECVPF

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது.

தீவிரவாத தாக்குதல் மேற்கொண்ட ஜிஹாதி துப்பாக்கிதாரி அடிக்கடி ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள குறித்த மசூதிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிற நிலையில், அந்த இரண்டு மசூதிகளையும் மூட ஆஸ்திரிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் அண்மையில் துப்பாக்கி ஏந்திய ஜிகாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதலை நடத்திய 20 வயதான குஜ்திம் ஃபெஜ்ஸுலை என்ற துப்பாக்கிதாரி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் குறித்த தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 16 பேரில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.