விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அதிகாரியை முக்கிய பதவியில் நியமிக்க முடிவு – ஜோ பைடன்

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சூசன் ரைஸ், அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் மாற்றங்களுக்கான சபைக்கு நியமிக்கப்படவுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 2021 ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.

இதனையடுத்தே சூசன் ரைஸ் குறித்த மாற்றங்களுக்கான சபைக்கு நியமிக்கப்பட உள்ளதாக குறித்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

இவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் எனவும் புலிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் முன்னெடுத்த போரை நிறுத்த முயற்சித்தவர் எனவும் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் யோசனையை கொண்டு வர திட்டமிட்டவர் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை சூசன் ரைஸ் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.