பஹ்ரைன் நாட்டு புதிய பிரதமராக இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா நியமனம்!

unnamed 23
unnamed 23

பஹ்ரைன் நாட்டு புதிய பிரதமராக இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா தனது 84 ஆவது வயதில் நேற்று அமெரிக்காவில் காலமானார்.

இதையடுத்தே, இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா பிரதமராக நியமிக்கப்பட்ள்ளார்.

அமெரிக்காவிலும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஹமாத் துணைப் பிரதமராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.