இந்திய மீன்களில் கொரோனா தொற்றியிருப்பதை கண்டறிந்த சீனா!

202011131206502860 China Says Fish Imports From Indian Firm Suspended As SECVPF
202011131206502860 China Says Fish Imports From Indian Firm Suspended As SECVPF

இந்திய மீன்களில் கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த பாசு சர்வதேச நிறுவனம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்த மீன் பொதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாசு நிறுவனத்தின் பொருட்களுக்கு சீனா தற்காலிக தடை விதித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு பின் இறக்குமதி பழையபடி தொடங்கப்படும் என்று சீன சுங்கத் துறை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவில் இருந்து பயணிப்போருக்கு நவம்பர் 5ஆம் திகதி முதல் சீனா தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.