வீதியில் பிச்சையெடுத்த காவல்துறை அதிகாரி: விசாரணையில் தெரிந்த ரகசியம்

4 4
4 4

இந்தியாவில் பெரிய காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் சாலையில் பிச்சையெடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளான ரத்னேஷ் சிங் தோமர் மற்றும் விஜய் படோரியா ஆகிய இருவரும் இரு தினங்களுக்கு முன்னர் சாலையில் ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது அங்கு பிச்சை எடுத்து கொண்டிருந்த நபரிடம் சென்ற அவர்கள் அவருக்கு உணவு மற்றும் உடைகளை கொடுத்தனர்.

அந்த பிச்சைக்காரர் முகம் முழுவதும் தாடி மற்றும் அழுக்கு உடையுடன் இருந்த போதும் ஒரு கம்பீரமான நிலையிலேயே இருந்திருக்கிறார்.

பின்னர் இருவரும் அங்கிருந்து கிளம்பிய போது அவர்களின் பெயரை சரியாக கூறி பிச்சைக்காரர் அழைத்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் பிச்சைக்காரரிடம் அவர் யார் என விசாரித்தனர்.
அப்போது தான் அவர் 1990களில் காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றிய மனீஷ் மிஸ்ரா என தெரியவந்தது.

இதையறிந்த ரத்னேஷ்மற்றும் விஜய் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அவருடன் இருவரும் சேர்ந்து பணிபுரிந்திருக்கின்றனர். மேலும் துப்பாக்கி சுடுவதில் மிகவும் கில்லாடியான மனீஷ் பல சாதனைகளை செய்து நல்ல செல்வசெழிப்போது வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

சில ஆண்டுகளாக மனநல கோளாறால் பாதிக்கப்பட்ட மனீஷ் இவ்வாறு சாலையில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சிகிச்சைகாக அவர்கள் அழைத்து சென்றார்கள். ஏற்கனவே மருத்துவமனையில் சில முறை அனுமதிக்கப்பட்ட அவர் அங்கிருந்து தப்பி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.