ஜப்பானில் மூன்று மாகாணங்களுக்கு பரவிய பறவைக் காய்ச்சல்!

1583761425 0515
1583761425 0515

ஜப்பானில் மூன்று மாகாணங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை மூன்றாவது மாகாணத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹையோகோ மாகாணத்தில் சுமார் 146,000 கோழிகள் அழிக்கப்படும் என அறிவக்கப்பட்டுள்ளது. இது பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்றாவது மாகாணமாக மாறியுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுடன் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போது ஜப்பானில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டு சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானிய அதிகாரிகளின் கருத்துப்படி, 10 கிலோமீட்டர் (6 மைலுக்கு மேல்) பகுதிக்கு ஒரு தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளனர். அங்கு கோழிகள் மற்றும் முட்டைகளின் புழக்கம் தடை செய்யப்படவுள்ளது.

புதன்கிழமை, புகுயோகா மாகாணத்தில் மேலும் பறவைக் காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டது.

நவம்பர் 1 மற்றும் 4 க்கு இடையில் ககாவா மாகாணத்தில் உள்ள ஒரு பறவை பண்ணையில் அழிக்கப்பட்ட சுமார் 4,000 கோழிகளில் எச்5 காய்ச்சல் நோய்க்கிருமி அதிகளவில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

அதன் பின்னர், இந்த மாகாணங்களில் மேலும் ஏழு நோய்தொற்றுக்குள்ளான கோழிகள் கண்டறியப்பட்டுள்ளன, இந்நிலையிலேயே, அதிகாரிகள் நூறாயிரக்கணக்கான கோழிகளைஅழிக்க உத்தரவிட்டுள்ளார்கள்.