ட்ரம்ப் தரப்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த நீதிமன்றம்!

vikatan 2019 11 9c6dd279 abf7 4429 99cb 56fac36711f2 CC 1
vikatan 2019 11 9c6dd279 abf7 4429 99cb 56fac36711f2 CC 1

பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் முறைப்படி நடக்கவில்லை எனத் தெரிவித்து ஜனாதிபதி ட்ரம்ப் தரப்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளை அம் மாகாண நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். எனினும், தேர்தலில் ஏராளமான மோசடிகள் நடைபெற்றுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

ஏற்கனவே பல்வேறு நீதிமன்றங்களில் ட்ரம்ப் தரப்பு தொடுத்த வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை எதிர்த்து ட்ரம்ப் தரப்பு வழக்கு தொடுத்திருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ட்ரம்பின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதி ஸ்டிபானோஸ் பிபாஸ் எழுதிய தீர்ப்பில், “சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நமது ஜனநாயகத்தின் உயிர்நாடி. தேர்தலே நியாயமில்லை என்று கூறுவது தவறு. வழக்குப் பதிவு செய்ய குற்றச்சாட்டுகளும், ஆதாரங்களும் தேவை. நம்மிடம் இரண்டுமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.