புகழ் பெற்ற தென்கொரிய திரைப்பட இயக்குனர் கொரோனாவால் மரணம்

76756 vifotmmata 1513582846
76756 vifotmmata 1513582846

உலகத் திரைப்பட விழாக்களில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட தென் கொரிய திரைப்பட இயக்குனர் கிம் கி டுக் (Kim Ki-duk ) கொரோனாத் தொற்றினால் லாத்வியாவில் நேற்றுக் காலமானார்.

அவரது மறைவுக்கு தென் கொரிய திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி உலக சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிம் கி டுக் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள், உலகளவில் சிறந்த திரைப்படங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவரது சமாரிட்டன் கேர்ள், ஸ்பிரிங், சம்மர், ஒன் ஆன் ஒன் போன்ற திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளன.

சினிமாவுக்கான தேவையற்ற புனைவுகளை தவிர்த்து, மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையையும், அவர்களின் மறுபக்கத்தையும் கிம் கி டுக்கின் திரைப்படங்கள் மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கின்றன.

யதார்த்த களத்தை தெரிவு செய்த போதிலும், கிம் கி டுக்கின் திரைப்படங்களில் உள்ள திரைக்கதைகள், மிக சுவாரசியமாகவும், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருப்பதே அவருக்கு உலக அளவில் ரசிகர்களை உருவாக்கியுள்ளது.